திருப்பத்தூரில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார்!!

    -MMH

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பிரபா செல்வி மஹாலில் சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமை தாங்க மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலை வகிக்க, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்கள் மற்றும் 11 வகையான வளைகாப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வாழ்த்தினார். கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் ஐந்து வகையான கலவை சாதங்களையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பு குளோரியா,

உணவுப் பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி, திருப்புத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், திருப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கல்லல் கமலி மீனாள், சிங்கம்புணரி அமுதா, திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், கண்டவராயன்பட்டி சன் சீமான் சுப்பையா, மாவட்ட பிரதிநிதி ஷாஜகான்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments