பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு!!

   -MMH

   பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே 'எந்த ரூட் சிறந்தது' என்ற போட்டியில், 3 குழுவாக பிரிந்து ஊர்வலமாக சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தடையை மீறி ஊர்வலத்தில் ஈடுபட்டதாக 200 மாணவர்கள் மீது தொற்றுநோய் பரவ காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-கார்த்திகேயன், தண்டையார் பேட்டை.

Comments