3 நாட்கள் தொடர் விடுமுறை... மக்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பு..!! கொரோனாவை மறந்த மக்கள்.!

 

-MMH

   விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி நாளை (வெள்ளிக்கிழமை) வருவதால் அதை தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை வருகிறது.அதேபோல் இன்று வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முகூர்த்த நாளாகவும் இருக்கிறது.

இதன்காரணமாக திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவு நடைபெறுகிறது. இந்தநிலையில் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இன்று முகூர்த்த தினம் என்பதால் நேற்றே சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். 

இதனால் புதன்கிழமை மாலை முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். விடுமுறை நாட்களை மனதில் கொண்டு பொதுமக்கள் கொரோனாவை மறந்துவிட்டனர். முக்கால்வாசி பேர் முகக்கவசம் அணியவில்லை. பேருந்துகளில் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு கூட்ட நெரிசல். தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது பொதுமக்களின் அலட்சியத்தால் மூன்றாவது அலை அச்சம் வந்துள்ளது.

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments