பொள்ளாச்சியில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி!!

 -MMH 

   பள்ளிகள் திறந்த சில தினங்களில்ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நோய் தொற்று பாதிப்பு!! இதை அறிந்த சக ஆசிரியர்களும் சக மாணவர்களும் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்த  சூழ்நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கும், புரவிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவிக்கும், பணிக்கம்பட்டி தனியார் பள்ளியில் மாணவர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்று மாணவர்களுக்கு பரவாமல் இருக்க நோய் தொற்று பாதித்த மாணவர்கள் இருந்த வகுப்பறைகளுக்கு சீல் வைத்து கிருமிநாசினி தெளித்தனர் சுகாதாரத்துறையினர்.

பள்ளிகள் திறந்த சில தினங்களில் தமிழகத்தில் சில பகுதிகளில்  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

தமிழகத் துணை தலைமை நிருபர்.

-M.சுரேஷ்குமார்.

Comments