அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 400 பேர் மீது வழக்கு !!

 

-MMH

          கடந்த வாரம் டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், செயலாளர் அப்துல் பாசித், மாநில செயலாளர் செங்கோட்டை பைசல், மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர், மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன், மாவட்ட துணைத்தலைவர் செய்யது மசூத் சாகிப், மாவட்ட துணை செயலாளர்கள் வல்லம் அஹமத், முஹம்மது மற்றும் 200 பெண்கள் உள்பட 400 பேர் மீது கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

நாளைய வரலாறு, நெல்லை செய்தியாளர்

-அன்சாரி. 


Comments