அலர்ட்டா இல்லைனா ஆப்புதான்..!!! சிகரெட் வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை அபேஸ்..!!!

   -MMH

   அன்னூர் தெலுங்குபாளையத்தில் பொட்டிக்கடை நடத்திவந்த மூதாட்டியிடம் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து 4 பவுன்  நகையை பறித்துச் சென்ற ஆசாமிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.

அன்னூர் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவி பார்வதி வயது 77. பார்வதி அதே பகுதியில் பெட்டிக்கடை   ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நேற்று மாலை இளைஞர் ஒருவர் அவர் பெட்டிக் கடைக்கு வந்து சிகரெட் ஒன்றை வாங்கி புகை பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் இன்னொரு சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார் பார்வதி மூதாட்டி சிகரெட் எடுப்பதற்காக சிகரெட் பாக்கெட் இருக்கும் இடத்தை நோக்கி திரும்பியுள்ளார் அப்போது சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பிடுங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்த தன் நண்பரிடம் தப்பித்து சென்று விட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத பார்வதி அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார்.  அதற்குள் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில்  தப்பிச் சென்று விட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத இந்த சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், மனிதாபிமானமற்ற இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments