கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட 4 பேர்... ஜி.பி.எஸ் கருவியின் மூலம் பிடித்த கோவை காவல்துறை !!

 

-MMH 

                கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட 4 பேர் ஒரு நிறுவனத்திலிருந்து காரை வாடகைக்கு எடுத்து குறிப்பிட்ட நாள் முடிந்த பிறகும் காரை திரும்ப ஒப்படைக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஜி.பி.எஸ் மூலம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் காரை கண்காணித்த போது அது கோயம்புத்தூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் கோயம்புத்தூர் காவல்துறையினர் ஜி.பி.எஸ் கருவியின் மூலம் கார் என்ஜினை ஆப் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நடுரோட்டில் நின்றதால் அதில் இருந்த 3 பேர் தப்பித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து பிடிபட்ட ஒருவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் பகுதியில் வசிக்கும் நவ்பல் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த காரை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

-சுரேந்தர்.

Comments