பொள்ளாச்சி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பங்களா கோர்ட்..!!

  -MMH

   பொள்ளாச்சி அருகே, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பங்களா கோர்ட் கட்டடம் சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோமங்கலம்புதுார் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 'பங்களா கோர்ட்' என மக்களால் அழைக்கப்படும், ஊரின் நுழைவுவாயில் உள்ளது.

லாரி மோதியதில், நுழைவுவாயிலின் இருபக்கமும் இருந்த துாண்கள் சேதமடைந்தன. சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

நுழைவுவாயில் வழியாக வருவோர், விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து செல்வது வழக்கம். கடந்த, 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, இந்த கட்டடத்தின் மேற்கூரை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டப்பட்டது போன்று உள்ளது. இந்த இடம் பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் பஞ்சாயத்து களமாக இருந்துள்ளதால், 'பங்களா கோர்ட்' என அழைப்பது வழக்கம்.

இங்கு, மார்கழி, புரட்டாசி மாதங்கள், கிருஷ்ண ஜெயந்தியின் போது, வீதி உலா வரும் பெருமாளை இந்த மேடையில் வைத்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பஜனை பாடல்கள் பாடி, வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது.

பழுதடைந்த துாண்களுக்கு பதிலாக, நாகர்கோவிலில் இருந்து இரண்டு துாண்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதை வைத்து புனரமைத்து, பழைய நிலைக்கு மாற்றும் பணிகள் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில்  இந்த பங்களா கோர்ட் காட்சி படுத்தபட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments