பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேர் கைது! மற்றும் பணம் ரூபாய் 9000/-பறிமுதல்!!

  -MMH

   உடுமலை உட்கோட்டம் அமராவதி காவல் சரகம் லிங்கமாவூர் அருகே உள்ள கொங்குரார் குட்டையில் பணம் வைத்து சேவல் சண்டை விடுவதாக உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேன்மொழிவேல் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேன்மொழிவேல் அய்யா அவர்கள் தலைமையில் தனிப்படை காவலர்கள் ராஜேந்திரன் மராஜ்கபூர் மற்றும் சையது ஆகியோர்கள் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். 

குற்றவாளிகள்: 1) வீரமுத்து (29) வேட்டைகாரன்புதூர்,  2) கஞ்சிமலை(31) குறிச்சிக்கோட்டை, 3) செந்தில் (35 )ஜல்லிபட்டி,  4) ரங்கநாதன் (39) குறிச்சிக்கோட்டை, 5) தியாகராஜன் (52 )ஜல்லிபட்டி,  6) இளவரசன் (35) ஜல்லிபட்டி. 

மற்றும் பணம் ரூபாய் 9000/- ஆகியவைகளை கைப்பற்றி அமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்ற சம்பவம் சம்பந்தமாக விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளையும் சேவல்களையும் பிடித்து வழக்கு பதிவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு தேன்மொழிவேல்  மற்றும்   தனிப்படை காவலர்களை  அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-துல்கர்னி உடுமலை.

Comments