திருப்பூரில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்..!! மக்களை பதைபதைக்க வைத்த சம்பவம்..!!!

  -MMH

   திருப்பூர் தெற்கு தோட்டம் பகுதியில் ஆறு வயது சிறுவனை 5  நாய்கள் கடித்து குதறிய சம்பவம் மக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது. சிசிடிவி காட்சி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் ஒரு இடைத்தரகர், இவரது 6 வயது மகன் பிரகதீஸ்வரன். இவர் நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது 5 தெரு நாய்கள் சிறுவன் வைதீஸ்வரன்னை துரத்தி வந்து கடித்துக் குதறி அவரை தூக்கிச் சென்றது. பிரகதீஸ்வரன் அலறல் சத்தத்தை கேட்டு  ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நாய்களை விரட்டி, சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் நகர் குட்பட்ட  வெள்ளியங்காடு, குப்பாண்டபாளையம் ஆகிய இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இருசக்கர  வாகன ஓட்டிக்களையும் துரத்தி செல்வதால் அவர்கள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அறிவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இது உடனே கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments