அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை 7 கிலோ பறிமுதல்! ஒருவர் கைது!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் அருகே உள்ள வேல்நகர் பஸ் ஸ்டாப் அருகே செந்தில்குமார் என்பவரது வீட்டின் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை சுமார் 7 கிலோ பதுக்கி வைத்திருப்பதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் திரு தேன்மொழிவேல் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த இரகசிய தகவலின் படி அங்கு சென்று காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினர் உடன் செந்தில் குமாரின் வீட்டின் அருகே சோதனை செய்தபோது குற்றவாளி பதுக்கி வைத்திருந்த 7 கிலோ குட்கா புகையிலை கைப்பற்றப்பட்டது.செந்தில்குமார் (35), த/பெ செல்வன், ஜீவா வீதி, குமரலிங்கம் என்பவரை கைது செய்து அமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-துல்கர்னி உடுமலை.
Comments