சிவகங்கை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்! குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்!

  -MMH

    சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சுற்றுவட்டார சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடியை சேர்ந்தவர் ஜெகன். இவர் இவரது தந்தை பாலமுருகன், தாய் ஜெயலெட்சுமி மற்றும் ஜெகனின் 11 வயது மருமகன் அம்ரீஷ் ஆகியோர் காரில் மானாமதுரைக்கு சென்றுள்ளனர். அதேபோல் மானாமதுரையில் இருந்து சதீஷ்குமார் என்பவர் தனது மனைவி ஜெயலெட்சுமி மற்றும் 2 வயது குழந்தை சுமந்த் ஆகியோருடன் காரில் புதுக்கோட்டை நோக்கிச் சென்றுள்ளார். இந்த இரு கார்களும் சிவகங்கை சுற்றுவட்டச் சாலையில் வரும்போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். 

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்த நிலையில் அங்கு, அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments