நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 80 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் எந்திரம் !!

 

-MMH

        நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 80 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 80  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 8 லட்சத்து 77 ஆயிரத்து 380 மதிப்பிலான 80 மாவு அரவை எந்திரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி உஷா மற்றும் முஸ்லிம் நல அமைப்பினர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு நெல்லை செய்தியாளர்,

-அன்சாரி. Comments