கடந்த 9 மாதமாக உரிமைப் போராட்டம். கேட்பாரில்லை.. அறிக்கையை வெளியிட சொல்லி கெஞ்சிய விவசாய பிரதிநிதி !!

 

-MMH

          இவர்கள் "சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் " இந்த வாசகம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வாசகத்துக்கு யார் சொந்தக்காரர்கள்? விவசாயிகள்தான். அப்படிப்பட்ட இந்த விவசாயிகளின்  கடந்த 9 மாத  உரிமைப் போராட்டத்தை அலட்சியமாகவே கருதுகிறது இந்த ஒன்றிlய அரசு என்பதே எல்லோருடைய மண குமரல்..

ஒன்றிய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினத்தன்று டெல்லி ரெட் போர்டில் அத்துமீறி சென்று விவசாயிகள் தங்கள் விவசாய சங்க கொடியை ஏற்றி தங்கள் உச்சகட்ட அபிவிருத்தியை தெரிவித்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி போட்டது. அதுமட்டுமின்றி டிராக்டர் பேரணி, ரயில் மறியல் சாலை மறியல் போன்ற போராட்டங்களையும் செய்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை நாங்கள் வீட்டுக்குப் போவதில்லை என்று சபதம் எடுத்து இன்னும் போராட்டத்திலேயே இருக்கின்றன.

9 மாதங்களுக்கு மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வேளாண் சட்டங்களைப் பற்றி விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடையும் விதித்தது மேலும் சட்டங்கள் தொடர்பாக தீர்வு காண நால்வர் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.  ஆனால் பாரதிய கிசான் சங்கத்தலைவர் பூபேந்தர் சிங் அக்குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார். விலகிக் கொண்டதன் அடிப்படையில் 3 குழுவாக செயல்பட்டு வந்த இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி முத்திரையிட்ட உரையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை மீது உச்சநீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் இப்பொழுது குழுவில் இடம்பெற்றுள்ள விவசாய பிரதிநிதி அணில் கண்வர் தங்கள் பிரச்சினை உடனடியாக உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு உடனடியாக  இந்த போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் ரமணா விற்கு  கடிதம் எழுதியுள்ளார்.

போராட்டக்குழு விவசாய சங்க தலைவர்கள் தெரிவிக்கையில் நாங்கள் அகிம்சை முறையிலும்  பொறுமை காத்து எங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவோம். உச்ச நீதிமன்றம் விரைவில் எங்களுக்கு நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்று நம்பிக்கையில் உள்ளம் என்றும் கூறினர்.

நாளைய வரலாறு செய்திக்காக

 -பாஷா, திருப்பூர்.

Comments