கோவையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரா நீங்கள்... நீங்கள் சுய தொழில் தொடங்க தமிழக அரசு உதவி !!

 

-MMH

         சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மை மேம்பாட்டு குழு சார்பாக சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கு 30 லட்ச ரூபாய் வரை கடன் உதவி செய்ய திட்டமிட்டுள்ளது. சுய  உதவிக் குழுக்களுக்கான கடன், சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற கடன் திட்டங்களை மேம்பாட்டு குழு நடைமுறைப்படுத்த உள்ளது. தகுதியான சிறுபான்மை மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கோவையில் வசிக்கும்  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள்,புத்த, பார்சி இனத்தை சேர்ந்த சமூகத்தினர் விண்ணப்பங்களை தகுந்த ஆவணத்துடன் கோவை மாவட்ட ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இதைப் பற்றி விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். முதுநிலை இளநிலை பட்டதாரிகளுக்கும் சுய தொழில் தொடங்க கடன் வாங்க உள்ளதாகும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 0422-2330044 தொடர்பு கொள்ளவும்.

-முகமது சாதிக் அலி.

Comments