கோவையை சேர்ந்த மருத்துவ மாணவன்- சோலையாற்றில் குளித்த போது காணவில்லை !!

 

-MMH

      கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் சோலையார் டேம் நிரம்பி வருகின்றது.  ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கோவை சேர்ந்த ஸ்ரீராம் வயது 25 இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பிஎஸ். இறுதியாண்டு படித்து வருவதாக தெரிகிறது. 

2 நாட்களுக்கு முன்பு ஐந்து நண்பர்களுடன் வால்பாறை சுற்றுலாவிற்கு வந்த நபர்கள் சோலையார் டேம் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரையில் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை இதில் வனத்துறையினரும் காவல்துறையினரும் ஸ்ரீராமை தீவிரமாக தேடி வருகிறார். 

நாளைய வரலாறுக்காக, வால்பாறையில் இருந்து, 

-செந்தில்குமார்.

Comments