குடிபோதை ஆசாமியா நீங்கள் ..!!! வாழ்விழந்து உயிர் போகும் அபாயம் ..!!!!

  -MMH

கோவை மாவட்டம் சேரன்மாநகர் அடுத்த காளப்பட்டி பகுதியில் குடிபோதைக்கு அடிமையாகி, பக்கவாதம் ஏற்பட்டு, குடியிலிருந்து மீள முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

காளப்பட்டி பகுதி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் கோகிலா. இவரது கணவர் முத்துக்குமார் வயது 33. இவர் குடிபோதைக்கு அடிமையாகி என்னேரமும் குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். அதிக மது குடியின் காரணமாக இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டில் படுக்கையிலேயே இருந்திருக்கின்றார். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தெரிகிறது, இந்நிலையிலும் அவரால் குடியை மறக்க முடியாமல் மீண்டும் குடித்ததாக தெரிகிறது. உடல்நிலை பாதிப்பு, குடியை மறக்க முடியாத  வேதனை போன்ற மன உளைச்சலுக்கும் காரணமாக நேற்று அவர் சாணி பவுடர் கரைத்துக் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து அவரே அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறியிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பார்ப்பவரை சோகத்தில் ஆழ்த்தியது. தகவலறிந்த  கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

'வாழ வேண்டிய வயசுங்க' இந்த குடியினால் இதெல்லாம் நடந்து போச்சு என்ற அக்கம்பக்கத்தினர் புலம்பல்கள்  நம் மனதை சற்று கலக்கமடைய தான் செய்கிறது.

'குடி குடியை கெடுக்கும்' இந்தப் பிரசுரம் எவ்வளவு உண்மை. இது போன்று இன்னும் எத்தனை  குடும்பங்கள் குடியினால் சீரழிந்து கொண்டு தானிருக்கின்றன. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.. இந்த குடியை ஒழிப்போம்  வளமான வாழ்வை வாழ்வோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments