அம்மன் கோவில் நகைகளை திருடியவர்கள் கைது !!

 

-MMH

     சிங்காநல்லூர் விவேகானந்தா நகரில் விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் தர்மகர்த்தா கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது, கதவு பூட்டு உடைந்திருந்தது. இதைக் கண்ட அதிர்ச்சி அவர் அடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, லட்சுமி உருவம் பொறித்த தங்க காசு, பொட்டுத்தாலி உட்பட, 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. 

இதையடுத்து சிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், அப்பகுதியில் சுற்றித்திரிந்த, 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.விசாரணையில் பெரியகுளத்தை சேர்ந்த விஜி, தனசேகரன், மாரிராஜன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அம்மன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments