கோவையில் விமான கடத்தல்...!! நிஜம் போல் நடந்த ஒத்திகை..!!!

 -MMH

கோவை சித்ரா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான கடத்தல் ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகையின் போது விமானத்துக்கு பதிலாக பஸ்சை விமான ஓடு தளத்தில்  நிக்க வைத்து அதில் இருக்கும் பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக கடத்துவது போலும், பாதுகாப்பு அதிகாரிகள் பயங்கரவாதிகளிடமிருந்து பிணைக்கைதிகளை மீட்பது போல் கடத்தல் ஒத்திகை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியை விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர்  மற்றும் கோவை மாவட்ட ஆணையர் திரு. தீபக் தாமோர் தலைமை தாங்கினார், விமான நிலைய இயக்குனர் மதிவாணன் முன்னிலையில், விமான நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விமான நிலைய பாதுகாப்பு நிலைப்பாடுகள் பற்றி  ஆலோசிக்கப்பட்டது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments