காட்டில் இருந்து வெளியேறிய யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது !!

 

-MMH

    வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகின்றது இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன, இந்நிலையில் காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறன்றன. 

இதனை அடுத்து காட்டிலிருந்து வெளியேறி யானைகள் ஜெகதீஸ்வரன் என்பவரின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளன. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் விவசாயிகள் அடிக்கடி யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

-P. ரமேஷ், வேலூர்.

Comments