ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணை திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

 

-MMH

        கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1050 கன அடி  தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் ஆற்றை கடக்கும் தரை பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளதால்  தரை பாலங்களில் ஆற்றைக் கடக்கும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார்.

Comments