டாப்சிலிப் புலிகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி..!

  -MMH

  டாப்சிலிப் புலிகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி..! 

கோவை  பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தை உட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம்  கொரோனா  ஊரடங்கு காரணமாக  சுற்றுலா பயணிகள்  வருவதற்கு தடை இருந்தது.  ஆனால் அத்தடு இன்றோடு  முடிகிறது என்று வனத்துறை அறிவித்துள்ளது.

டாப்ஸ்லிப் வனச்சரகத்தில் மான்கள் யானைகள் மயில்கள் காட்டெருமைகள் போன்ற விலங்குகள் உள்ளன. அதனைக் காண பல்வேறு இடங்களிலிருந்து  பயணிகள் வருவதுண்டு.

இன்று வனச் சரகம் திறக்கப் படுவதாக ஓர் அறிக்கை வந்துள்ளது.  சுற்றுலா பயணிகள்' கோவிட் வேக்சிங் சர்டிபிகேட்டை' காட்டி சுற்றிப் பார்க்கச் செல்லலாம் என்றும்  அறிவுறுத்தப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சா. பிரசாந்த்.

Comments