மசூதிகளில் கொரானா தடுப்பூசி முகாம்கள் !!!

  -MMH

   அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து நோய்தொற்று அதிகப்படியாக உள்ள காரணத்தால் அதை. தடுக்கும் விதமாக கோவை  மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் பல்வேறு இடங்களில்  தடுப்பூ ஊசி செலுத்தி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக மசூதிகளில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ததை தொடர்ந்து  நேற்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கரும்புக்கடை பூங்கா நகர் மஸ்துல்  இஹ்லாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் கொரானா தடுப்பூசி 'கோவிஷீல்ட்டு'  300 நபர்களுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் மூலம் TMS  அப்பாஸ் ஏற்பாட்டில் அதிகமான மக்கள்  ஆர்வத்தோடு கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

இந்த முகாமை சிறப்பாக வழிநடத்திட கலந்துகொண்ட மஜக மாவட்ட நிர்வாகிகளும் மருத்துவ அணி நிர்வாகிகளும் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் நிர்வாகிகளும் இஹ்லாஸ் பள்ளிவாசல் நிர்வாகமும் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments