இன்று விநாயகர் சதுர்த்தி திருநாள்!!

 -MMH

விநாயக சதுர்த்தி என்பது பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாட படும் முக்கியமான விழாவாகும்.  இந்த விழா ஆண்டு தோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி, நம் நாட்டின் தேசிய விழா மற்றும் கலாச்சார விழாவாக கொண்டாட படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அநேக மக்கள்,  தங்கள் வீட்டில் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். 

விநாயகர் சதுர்த்தி, குடும்ப விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்களோடு சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

சமீப காலமாக தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு,  மண்ணால், முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப் படுகின்றன. இவ்வாறு நிறுவப்படும் விநாயகர் சிலைகள்,  பூஜைக்கு பின்னர் 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்க படுகிறது.

வீடுகள் மற்றும் கடைகளில் விநாயகர் சிலை அல்லது படங்களை வைத்து  கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து பூஜை செயது வணங்குகிறார்கள்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே...

விநாயகர் சதுர்த்தி திருநாளில் விநாயகரை வணங்கி வளம் பெறுவோம்.

மேலும் நோய் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிக எளிமையாக கொண்டாடப்படுகிறது அனைவரும் அவரவர் வீடுகளில் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டு விநாயகர் அருள் பெறுவோம் அதேசமயம் நோய்த் தொற்றில் இருந்து நம் நம்மளை பாதுகாத்துக் கொள்வோம் என்ற சிந்தனையோடு..

-சுகன்யா சுரேஷ், பொள்ளாச்சி.


Comments