இவன் தான்யா மனுஷன்..!! சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்..!!!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையின் காரணத்தினால் சாலைகள் வழுக்கல் ஆகவும் ஈரப்பதமாகவும் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் மாட்டிக் கொள்ளும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அந்தப் பகுதியைச் சேர்த்த சமூக ஆர்வலர் ஒருவர் மழைநீர் தேக்கத்தால் ஏற்பட்ட சாக்கடை அடைப்புகளை கிட்டத்தட்ட 4 மணி நேரம் போராடி சரி செய்து உள்ளார். இதை கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இவன் தான்யா  மனுஷன் . இவரைப்போல் எல்லோரும் சமூக சிந்தனையுடன் சேவை செய்தால்  நிச்சயமாக நம் நாடு நலம் பெற்று விடும் என்று இவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும் மக்களும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், வால்பாறை.

Comments