நெல்லையில் குட்கா கடத்தியவர் கைது !!

 

-MMH

              போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 10673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் முன் போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் பதில் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கையின் எதிரொலியாக கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நெல்லை மாநகர காவல் துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் இன்று தச்சநல்லூர் குருநாதன் விலக்கு அருகில் வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது மானூரை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் சொகுசு காரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 93 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடமிருந்த 93 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தச்சநல்லூர் மதுரை ரோடு வடக்கு புறவழிச்சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது.

அப்போது அதே மானூரை சேர்ந்த ஷேக் (47) மைதீன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 30 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்றார். இதையடுத்து ஷேக்மைதீனையும் கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று ஒரே நாளில் தச்சநல்லூர் பகுதியில் மொத்தம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 123 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாளைய வரலாறு நெல்லை செய்தியாளர், 

-அன்சாரி. 


Comments