காளப்பட்டி அமைச்சர் வருகை! அரசு பள்ளி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்!!

      -MMH

கோவை காளப்பட்டி பகுதிக்கு உட்பட்ட வீரியம் பாளையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கமும், பேக்கர்ஸ் ஹூக்ஸ் இணைந்து கட்டிய மாணவர்களுக்கான புதிய அறைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

ரோட்டரி சங்கமும், பேக்கர் ஹியூக்ஸ் இருவரும் இணைந்து முப்பத்தி ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வீரியம் பாளையம் நடுநிலைப் பள்ளிக்கு 2 புதிய அறை, மாணவர்களுக்கான கழிவறைகள், தலைமையாசிரியர் அறை போன்றவைகளை கட்டி தந்துள்ளனர். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கவுண்டர்  கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்க, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுகிரா, கோவை மாவட்ட கல்வி முதன்மைச் செயலாளர் திருமதி கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் அமைச்சர் பேசுகையில் மாநிலம் முழுவதும் முதல்வர் அவர்கள் வேகமாக செயல்பட்டு வருவதாகவும் பல வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருவதாகவும், மேலும் இது சேவை நிறுவனங்களின் செயல் கல்வியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றும் பணம் கூட வேண்டாம் 4 இருக்கைகள் வாங்கித் தந்தாளே போதுமானது எனவே அனைவரும் இதுபோன்ற சேவையாற்ற முன்வர வேண்டுமென்று அவர் பெருமிதத்துடன் கூறினார். நீட் தேர்வு ரத்து காக பல ஆண்டுகளாக திமுக குரல் கொடுத்து வருவதாகவும் இந்த கூட்டத்தொடரில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேக்கர் அண்ட் ஹியூக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பவிக் முவையா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன் குமரேசன் ஸ்ரீதர் மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-முகமது சாதிக் அலி.

Comments