சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸைச் சந்தித்த தமிமுன் அன்சாரி!

   -MMH

  சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அளித்தார். அப்போது துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலச் செயலாளர் சீனி முகம்மது ஆகியோரும் உடனிருந்தனர்.

கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் இதில் விவாதித்தனர். பின்னர் கோவை மாநகர மஜக-வினர் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நல கோரிக்கை மனுக்களும் அவரிடம் அளிக்கப்பட்டது. விரைவில் முதல்வரை சந்திக்கும் போது இவை குறித்து எடுத்துக் கூறுவதாக ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பில் ஐ.கே.பி. மாநிலச் செயலாளர் இஷாக், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எச்.அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் டி.எம்.எஸ்..அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ.டி.ஆர்.பதுருதீன், சிங்கை சுலைமான் மற்றும் மனித உரிமை ஆர்வலர் காதர் ஆகியோர்களும் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments