தஞ்சையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு அபிஷேகம்!!

 -MMH

தஞ்சையில் நேற்று  விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக சிறிய கோவில்களில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக இந்த நாள்   கொண்டாடப்படுகிறது.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது.  இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். 

சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார் . மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்குவர்.

தமிழகத்திலும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில ஆண்டுகளாகவே மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா  நோய் பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடு விதிகள் அமலில் உள்ளதால்  கோயில்களில் மிக எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 

அதன்படி நேற்று தஞ்சையில் திருவேங்கடம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கட நிவர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவானது மாலை 6 மணிக்கு பின்பு  கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு ஆலயத்தில் பிரார்த்தனை செய்தனர் .

ஆலயத்தின் சிவாச்சாரியார் திரு ஞான சுந்தரம் அவர்கள்  ஆகம விதிகளைப் பின்பற்றி மிகவும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகளை செய்தார். பின்னர்  துர்க்கை அம்மன் , ஆஞ்சநேயர் , நவக்கிரகங்களுக்கு  அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்வித்தார் .

அவரின் கைவண்ணத்தால் விநாயகர் மிகவும் ஜொலிப்புடன் உயிர்ப்புடன் காட்சியளித்தார். இறுதியில்  அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை  திரு ராஜசேகர், திரு ஸ்ரீராம் அவர்கள் தலைமையிலான வழிபாட்டு குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். 

சிவாச்சாரியார் ஞானசுந்தரம் அவர்கள் பக்தர்களுக்கு  இறைவனின் அருட் பிரசாதத்தை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments