புகார் கொடுத்த சில மணி நேரத்தில் திருடனை பிடித்தது விருதம்பட்டு காவல்துறை !!

 

-MMH

      வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் வசித்து வருபவர் கார் மெக்கானிக்கல் சீனிவாசன் இவர் வீட்டின் எதிரே ஆல்டோ கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திருடு போய்விட்டது.

இதையடுத்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்துள்ளார் இதையடுத்து உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கார் திருடிய பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சேட்டு 25 வாலிபரை  கைது செய்து நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு.

திருடுபோன காரின் விலை 4 லட்சத்தி 50ஆயிரம் என கூறப்படுகிறது புகார் கொடுத்து ஒன்பது மணி நேரத்திற்குள் திருடனை கைது செய்து காரை பறிமுதல் செய்த விருதம்பட்டு உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் அவர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments