கோவையில் தொடரும் வாகன திருட்டு; குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் அதிரடி!!

 

-MMH

        பெருநகரங்களில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக ஒரு இருசக்கர வாகனம் இருக்கும் அளவுக்கு மக்களின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதுபோல் கோவை மாநகரிலும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கோவையில் இருசக்கர வாகன திருட்டும்  அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் இரு சக்கர வாகனம் தொடர்ந்து திருடப்பட்டு வருவது வாடிக்கையாகி போனது .இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

எனவே மாநகர காவல்துறையினர் அதிரடியில் இறங்கி இதற்கான தனிப்படை அமைத்துள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையாளர்  Tr.Deepak M.Damor I.P.S அவர்களின் உத்தரவின் பேரில், கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் வடக்கு திரு T. ஜெயச்சந்திரன் I.P.S  அவர்களின் மேற்பார்வையில், கோவை மாநகர ஆர்.எஸ். புரம் காவல் உதவி ஆணையாளர் திரு .மணிகண்டன் அவர்களின் தலைமையில்,            ஆர். எஸ். புரம் காவல் நிலைய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.       T.பரிமளாதேவி ,சார்பு ஆய்வாளர்                    திரு. K.நாகராஜ் மற்றும் திரு கிருஷ்ணமூர்த்தி,  வைத்தியநாதன்,  சுரேஷ், ஸ்ரீதரன், சாகுல் ஹமீது ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் எ) அசாருதீன், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது சாதிக், மற்றும் ஒண்டிபுதூர் பட்டணம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) ரஞ்சித்குமார் ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் ஆர்.எஸ்.புரம், உக்கடம்,  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 12 இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments