மாநிலம் தழுவிய சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!! சிங்கம்புணரி பகுதியில் அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்!!

   -MMH

     மாநிலம் தழுவிய சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் சிங்கம்புணரி பகுதியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைக்க உள்ளார்.

மாநிலம் தழுவிய சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

சிங்கம்புணரி அரசு ஆரம்பப்பள்ளி எண் 1ல் காலை 7 மணியளவில்  ஊரக வளர்ச்சி துறை  அமைச்சர் கே..ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். மேலும் சூரக்குடி, முறையூர் முகாம்களிலும் கலந்துகொள்ள உள்ளார்.  

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆணைக்கிணங்க பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய மையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 47 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதற்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் வட்டாட்சியர் அலுவலகம்,  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், சுய உதவிக்குழு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி நபிஷாபானு தலைமையேற்றார்.  இந்த கூட்டத்திற்கு வட்டாட்சியர் கயல்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜா, பாலசுப்ரமணியன், செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள படி மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடத்துவது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தின் எல்லைக்குட்பட்ட 47 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு  கிராம மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் ஒரு தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற பெற தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சிமன்ற தலைவர்களின் கொரோனா தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் வெற்றியுடன் நடத்தப்பட்டு மாநிலத்தின் முதல் மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் தேர்ந்தெடுக்க வேண்டி அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முடுக்கி விட்டுள்ளார்.

-அப்துல்கலாம் ராயல் ஹமீது.

Comments