தும்பைப்பட்டி ஊராட்சியில் புதிய மின் மாற்றி டிரான்ஸ்பார்மர் மக்களுக்கு அர்ப்பணிப்பு!

-MMH

   காமராஜரின் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சரும், இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட தியாகியுமான கக்கன் பிறந்த ஊர் தும்பைப்பட்டி. அந்த ஊராட்சிக்குட்பட்ட து.அம்பலகாரன்பட்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக குறைவழுத்த மின்சாரத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தும்பைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராகப் பாட்டையா (எ) அயூப்கான் பொறுப்பேற்றார். அவரது தீவிர முயற்சியால் து.அம்பலகாரன்பட்டியில் புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் குறைவழுத்த மின்சாரம்  குறைபாடு நீங்கியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஊராட்சி மன்றத் தலைவர் தீவிரமாக முயற்சித்து நிறைவேற்றியதற்கு இப்பகுதி மக்கள் தங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். மின்மாற்றி அர்ப்பணிப்பு விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் புனிதா மகாதேவன், வார்டு உறுப்பினர்கள், உதவி மின்பொறியாளர், ஊராட்சி செயலர் பாண்டிச்செல்வம் மற்றும் அனைத்து மின் ஊழியர்களும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- வெண்புலி மதுரை.

Comments