குடிமகன்கள் கொட்டாரமாக மாறும் நிழல் கூடாரங்கள்..!!!

  -MMH

குடிமகன்கள் கொட்டாரம் அடிக்கும் இடமாக மாறும் நிழல் கூடாரங்கள்..!!!

கோவை மாவட்டம் வால்பாறை தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களின் ஒரு  முக்கிய அங்கம் வகிக்கிறது வால்பாறை மலைப்பகுதி. இந்த சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள வாட்டர் பால்ஸ் முதல் பிரிவு பஸ்நிலையத்தில் பயணிகள் நிழல் கூடாரம் ஒன்று உள்ளது. அந்த நிழல் கூடாரம் மக்கள் பயன்பாட்டுக்கு உபயோகம் இல்லாத நிலையில் சீர்குலைந்துள்ளது.

வால்பாறை ஒரு  மலைப்பகுதி என்பதால் அதிக நாட்கள் மழை பெய்யும் சூழலே அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த நிழல் கூடாரம் மக்களுக்கு மழைக்கு ஒதுங்க பயன்பட்டு கொண்டிருந்தது. இப்போது சீர்குலைந்து  உள்ளதினால் மக்கள் பயன்பாட்டில் இல்லை. இக்  காரணத்தினால் இந்தக் கூடாரத்தில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கொட்டாரம் ஆக அது மாறியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு மதுக் குடிகாரர்கள் அங்கு இடையூறாக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று இதுபோல் சீர்குலைந்து இருக்கும் நிலையைக் உடனே சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், வால்பாறை.

Comments