பொள்ளாச்சி தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரத்தில் இளைஞர் தற்கொலை..! ஆனைமலை காவல்துறையினர் தீவிர விசாரணை !!

 

-MMH

     பொள்ளாச்சி ஆனைமலை தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஜூஸ் உடன் சாணி பவுடர் கலந்து குடித்து நேற்று  தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முதல் முத்துசாமிபுதூர் ஈஸ்வரி என்பவரின் மகன் செல்வராஜ் வயது 30 என்பவர் காணவில்லை என்று மீனாட்சிபுரம்,

காவல்நிலையத்தில் இன்று காலை புகார் கொடுக்கப்பட்ட நிலையில்  ஆனைமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆனைமலை காவல் நிலையத்திற்கு  தகவல் கிடைத்தது தகவலின்பேரில் SSI ஜோதிமணி சார் மற்றும் மீனாட்சிபுரம்  துணிவே துணை நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியை சுற்றிவளைத்து தேடி  உடலை கண்டறிந்தனர்.

உடலை கைப்பற்றிய ஆனைமலை  போலீசார் விசாரணையில் இறந்து கிடப்பது மீனாட்சிபுரம் காவல்நிலையத்தில் காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்ட ஈஸ்வரியின் மகன் செல்வராஜ் தான் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்பு உடலை பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து  ஆனைமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக துணை தலைமை நிருபர், 

-M.சுரேஷ்குமார்.

Comments