தனியார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பொதுமக்கள்.. காலி செய்யக் கோரிய நடவடிக்கையை எதிர்த்து போராட்டம்..!!

  -MMH

   திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அணைமேடு பகுதி. இங்கு ஒரு தனி நபருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 25 குடும்பங்கள் பல ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் குடியிருக்கின்றன.

இந்த சம்பவம் பல ஆண்டு காலமாக அந்த இடத்துக்கு சொந்தக்காரருக்கு தெரியவில்லை என்று  கூறப்படுகிறது. தற்போது இதை தெரிந்து அதிர்ச்சியடைந்த அந்த நிலத்தின் சொந்தக்காரர் தன்னுடைய இடத்தை மீட்டுத் தரவேண்டும் என்று சட்ட ரீதியாக அணுகியுள்ளார். 

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு நிர்வாகம் உரிமையாளருக்கும் இடத்தை மீட்டுத்தரும் நோக்கில்  நிலத்தை அளக்க சென்றபோது அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் மக்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.


மேலும் தங்கள் இந்த இடத்தை காலி செய்ய மாட்டோம் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் அவ்விடத்தில் வரவழைக்கப்பட்டு  குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து  கூட்டத்தை  கலைத்தனர்.

நாளைய  வரலாறு செய்திக்காக,

-பாட்ஷா, திருப்பூர்.

Comments