மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்..!!

  -MMH

  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்  மாவட்ட நிர்வாகம்,  மாநகராட்சி, காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், கோவை மருத்துவமனைகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திட பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நேற்று (07/09/21) மாலை நடைபெற்றது.

வரும் ஞாயிறு அன்று சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கொரானோ தடுப்பூசி போடும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடிகள் மற்றும் போலியோ மருந்து அளிக்கும் இடங்களில் மற்றும் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடுவது மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

மக்கள் தங்களின் நலன் கருதி இரண்டு டோஸ் தடுப்பூசிகளை தாங்களே முன்வந்து போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப் பட்டது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஊரடங்கு தளர்தப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார்.

மாநகராட்சி ஆணையாளர் முகாமிற்கான வழிமுறைகள் பற்றி விபரமாக எடுத்துக் கூறினார். இன்று இது பற்றிய விபரமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஆட்சியர் தெரிவத்தார். 

நம்ம கோவையில் சர்வ மத தலைவர்களும் சமுதாய தலைவர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுடன் இணைந்து கொரோனா  தொற்று நோயை எதிர்த்து 100 % தடுப்பூசி போட்டுக் கொண்டு தேசத்திற்கே முன்னுதாரணமாய் திகழ்வோம் என கலந்து கொண்ட தன்னார்வல தொண்டு நிறுவன தலைவர்கள் தெரிவித்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments