மாயமில்லே மந்திரமில்லே.. பரீட்சை எழுத போன பெண்ணை காணவில்லை..!!

 

-MMH

     கோவை அவிநாசி ரோட்டில் மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்கும்  மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி  மாயம். ஹாஸ்டல் வார்டன் போலீசில் புகார் போலீஸ் விசாரணை.

திருநெல்வேலி தென்காசி பகுதியை சேர்ந்தவர் மணி  இவரது மகள் மலர்கொடி வயது 20 இவர் அவிநாசி ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் தங்கி மூன்றாம் ஆண்டு. M. B. B. S  பயின்று வருகிறார். கடந்த மாதம் கொரோனா  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கோவைக்கு திரும்பிய மலர்கொடி  ஹாஸ்டலில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்திருக்கிறார்.

நேற்று காலை ஹாஸ்டலில் இருந்து கிளம்பி கல்லூரிக்கு பரீட்சை எழுதுவதற்காக மலர்க்கொடி சென்றதாக தெரிகிறது  , பரீட்சை எழுத சென்ற மலர்கொடி அதன்பிறகு ஹாஸ்டலுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்திருக்கிறது. ஏதோ விபரீதம் என்று அறிந்த கோவை மருத்துவக் கல்லூரி  ஹாஸ்டல் வார்டன் கலைமகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் வேலைக்கு செல்லும் பெண்களும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும் மாயமானது வாடிக்கையாகி வருகிறது. காவல்துறை இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

நாளை வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments