போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நான்கு சக்கர வாகனங்கள்...!!! சரி செய்யுமா அரசு நிர்வாகம் மக்கள் எதிர்பார்ப்பு..!!!

  -MMH

    கோவை மாவட்டம் வால்பாறை தமிழக சுற்றுலா தளங்களில் பிரபலமான ஒன்று. கேரளா பார்டர் ஐ ஒட்டி இருக்கும் மலைப்பகுதி என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த சுற்றுலா தளத்திற்கு வரும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வால்பாறையில் உள்ள காந்தி சிலை பேருந்து நிலையம்  அருகாமையில்  தங்களின் உணவு மற்றும் தங்கும் தேவைகளுக்காக வாகனங்களை நிறுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி நிறுத்தப்படும் வாகனங்கள் சாலையோரத்தில் வலது பக்கமும் இடது பக்கமும் ஒரு வரைமுறையின்றி  நிறுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை மக்கள் எழுப்புகின்றன. அப்படி வரைமுறையின்றி நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களினால் அந்த சாலை வழியே செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் இடைஞ்சலாக உள்ளது என்று மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசு நிர்வாகம் இதை உடனே கவனத்தில் எடுத்துக்கொண்டு இதை சரி செய்ய வேண்டும் என்று மக்கள் தங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-செந்தில், வால்பாறை.

Comments