கோவையில் காவல் ஆணையர் தலைமையில் விநாயகர் சதூர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது !!
கோவை மாநகர காவல்துறை சார்பில், கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, இந்து அமைப்பினர்கள் உடன ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காவல் துணை ஆணையர்கள், சட்டம் (ம) ஒழுஙகு, குற்றம், போக்குவரத்து மற்றும் தலைமையிடம், அனைத்து உட்கோட்ட காவல் உதவி ஆணையர்கள், சட்டம் (ம) ஒழுங்கு மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள், சட்டம் (ம) ஒழுஙகு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசாணை (நிலை) எண். 765 நாள். 30.08.2021ன் படி தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சூழலில் வருகின்ற 15.09.2021ம் தேதி வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தான அறிவிப்புப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு இந்து அமைப்புகளின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-ராஜேந்திரன், கோவை.
Comments