சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி!!

       -MMH

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு கடந்த 20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு பிரத்தியேக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிக்காக திங்கட்கிழமை வார விடுமுறை அனுசரிக்கப்படும் என மாவட்ட அலுவலர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments