உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம் ஆகும் அதிமுக..!!

   -MMH

   தமிழகத்தில் விடுபட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நடந்து முடிந்து விடும் எனவும், ஓரிரு மாதங்களில் நடத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணிப்பேட்டை எஸ்.பி.வேலுமணி, சு.ரவி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், நெல்லை-தளவாய் சுந்தரம், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பரமசிவன், சீனிவாசன், இன்பதுரை, கணேசராஜா, வேலூர்- கே.பி,முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன், விழுப்புரம்-ஓ.எஸ்-மணியன், சி.வி.சண்முகம், தென்காசி-ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, சி.கிருஷ்ணமுரளி, கள்ளக்குறிச்சி- எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், மோகன், குமரகுரு, காஞ்சிபுரம்-திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா,காமராஜ், பெஞ்சமின், சோமசுந்தரம், திருப்பத்தூர்-செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கருப்பணன், கே.சி.வீரமணி, செங்கல்பட்டு-தங்கமணி, பா.வளர்மதி, சிட்லபாக்கம் ஆர்.ராஜேந்திரன், ஆறுமுகம், கே.பி.கந்தன்" ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி. 

Comments