சிங்கம்புணரி அருகே தாய்-மகள் மீது வீடுபுகுந்து தாக்குதல்! இருவர் கைது!

 

-MMH

எஸ்.புதூர் அருகே உள்ள அரியாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டியப்பன் மனைவி அழகம்மாள் (வயது 39). கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக 13 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இடத்தகராறு காரணமாக இதே ஊரில் உள்ள பெருமாள், சாந்தி, சிவா, வசந்தாள் ஆகியோருடன் அழகம்மாளுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று, வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் 4 பேரும் சேர்ந்து வீட்டிலிருந்த அழகம்மாளையும், அவரது 15 வயது மகளையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து புகாரின்பேரில் உலகம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரியாண்டிபட்டி கிரமத்தைச் சேர்ந்த பிச்சன் மகன் சிவா (19) , பெருமாள் மகன் பெருமாள் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிங்கம்புணரி நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments