சிங்கம்புணரியில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!

 

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து சிங்கம்புணரி ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா மன்றம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பூரணசங்கீதா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து மற்றும் சோமசுந்தரம், 

துணை ஒன்றியச் செயலாளர் சிவபுரி சேகர், இந்தியன் செந்தில், இலக்கிய அணி தனிக்கொடி ஆசிரியர், மாணவரணி மனோகரன், வழக்குறைஞர் கணேசன், குடோன் மணி, குடோன் கதிர், ஞானிசெந்தில், ஒன்றிய பொருளாளர் மணப்பட்டி பாஸ்கரன் மற்றும் ஒன்றிய நகர கிளைக் கழக திமுகவினர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி, காங்கிரஸ் தலைமை நிலைய பேச்சாளர் சிங்கைதருமன், ஜெயராமன், குழந்தைவேலு, சேவுகமூர்த்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-ராயல் ஹமீது & அப்துல்சலாம்.

Comments