விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !!

 

-MMH

        திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் பைபாஸ் சாலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினர் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும், அரசு மதுபான கடைக்கு அனுமதி  வழங்கியுள்ள தமிழக அரசு இந்துக்களின்  முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பிரச்சார அணி செயலாளர் குமரன், மாநில மாணவரணி தலைவர் கோபி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினர்  தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments