பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது!!

  -MMH

     சென்னை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவரின் மனைவி ரவீனா (27). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ரவீனா சோழிங்கநல்லூர் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரின் கைப்பையை பறித்து சென்றனர்.

அதில், 3000 ரூபாய் பணம், செல்போன், அரசு அடையாள அட்டைகள் இருந்தன. இது குறித்த புகாரின் பேரில், செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது, கண்ணகி நகரை சேர்ந்த அஜய் (19), அஜித் (19), என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-வேல்முருகன், சென்னை.

Comments