கோவை அருகே வாலிபர் கொலை!!

  -MMH

   கோவை மலுமிச்சம்பட்டியை அடுத்த போடிபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமி மகன் ரமேஷ், (23). நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரில் போடிபாளையத்தில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

  இச்சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடினர். இதில் போடிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் (28), சஞ்ஜீவ்குமார் (21), சந்தோஷ் (22), ரகு கிருஷ்ணன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக, கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்பு நால்வரையும் சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments