பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு மூலிகைகள் வழங்கும் நிகழ்ச்சி!
75 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் வழிகாட்டுதல்படி, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவப் பிரிவின் சார்பாக, சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு மூலிகைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (28-9-2021) நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் ராம்கணேஷ் தலைமை வகித்தார். சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட 50 நபர்களுக்கு, மூலிகை கன்றுகளுடன் அவற்றின் பெயர் மற்றும் பயன்படுத்தும் விதம் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சித்த மருத்துவர் சரவணன் மற்றும் பொறுப்பு மருத்துவர் தென்றலன், மருத்துவர் முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments