தடுப்பணையில் குளித்த இளம்பெண் பலி!!

     -MMH

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார். கோவை சங்கனூர், சண்முக நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 20). ராஜேஷ் தனது மனைவி சரஸ்வதி மற்றும் நண்பர்களுடன் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் இருக்கும் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். பின்னர் அவர்கள் தெனமநல்லூர் ரோட்டில் உள்ள நொய்யல் ஆற்றில் சித்திரைச்சாவடி தடுப்பணையின் பின்பகுதியில் இறங்கி குளித்தனர். அப்போது சரஸ்வதி எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக சரஸ்வதி தண்ணீரில் மூழ்கி பலியானார். பின்னர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments