மூலத்துறை அணைக்கட்டு மெயின் கேட்டுகள் பூட்டு போடப்பட்டதால் அச்சத்துடன் ஆற்றுப் பாலத்தை கடக்கும் பொதுமக்கள்!!

   -MMH

   தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மூலத்துறை அணைக்கட்டு மெயின் கேட்டுகள் பூட்டு போடப்பட்டதால்  அச்சத்துடன் ஆற்றுப் பாலத்தை கடக்கும் பொதுமக்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆழியார் அணை நிரம்பியது. இதனையடுத்து அணையிலிருந்து  நேற்று மாலை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக கேரள எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமி புதூர் தரை பாலத்திற்கு மேல் இன்று காலை  தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

போக்குவரத்து பாதிப்பை சரி செய்யும் வகையில் மூலத்துறை அணைக்கட்டின் இரு பகுதியில் உள்ள மெயின் கேட் திறக்கப்பட்டு, போக்குவரத்துக்கு வழி வகை செய்து கொடுத்தது அணைக்கட்டு நிர்வாகம். அதேசமயம் இன்று மதியத்திற்கு மேல்  நீர்வரத்து குறைந்ததால் தரைப்பாலத்தில் கீழே தண்ணீர் சென்றதும் அணைக்கட்டின் மெயின் கேட் இரண்டையும் பூட்டியது அணையின் நிர்வாகம் மேலும் பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரைப்பாலத்தில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் எப்ப வேண்டுமானாலும் ஆற்றில் தண்ணீர் வரலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

- M.சுரேஷ்குமார், தமிழகத் துணை தலைமை நிருபர்.

Comments